ETV Bharat / briefs

டீம்ல ஒரே ஒரு குறைதான்.. அது என்னென்னா..! - கவுதம் கம்பீர் - WorldCup

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கூடுதலாக இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்து இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டீம்ல ஒரே ஒரு குறைதான்- கம்பிர்
author img

By

Published : May 16, 2019, 11:49 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் 15ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், இந்திய அணியைக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில்,

"இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஒத்துழைக்கும் வகையில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்து இருக்கலாம் என நினைக்கிறேன். கூடுதல் பந்துவீச்சாளருக்கு பதிலாக ஆல் ரவுண்டர்களான விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் உள்ளனர். என்றாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தொடரில், இந்திய அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மோதவுள்ள ஆட்டத்தை நிச்சயம் தொலைகாட்சியில் கண்டுகளிப்பேன்" என்றார்.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் ஜூன் 5ஆம் தேதி சவுத் ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.