ETV Bharat / briefs

பாதுகாப்பு ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யவிருக்கும் மத்திய அரசு!

author img

By

Published : Jun 11, 2020, 5:17 PM IST

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்போவதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான ஆயுத உள்நாடு உற்பத்தியில் இறங்கும் மத்திய அரசு

கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து உள்நாட்டில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை வகுத்துவரும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக பொருளாதார வல்லுநர்களால் இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

’ஆத்மா நிர்பர் பாரத் அபியான்’ என்ற பெயரின் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விரைவில் கொள்முதல்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 கட்டுப்படுத்தப்பட்டதற்குப் பின் இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவிட்-19க்கு பிறகான இந்திய அரசின் வளர்ச்சி நோக்கிய பீறுநடையில், இதனை நாம் நடைமுறையில் காணுவோம். விரைவில் தனியார் தொழிற்சாலைகள் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய முன்வரும். இதனால் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் வெகுவாகக் குறைக்கப்படும் சூழல் ஏற்படலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான சிறந்த ஆயுதங்களின் நிறைவான இருப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், அதே நேரத்தில் நாட்டின் தனியார் துறையின் பிரச்னைகளைச் சீர்செய்யவும் இத்திட்டம் கைகொடுக்கும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது. போட்டித்தன்மையில் விலையை நிர்ணயிப்பதின் மூலமும், உற்பத்தி தரத்தில் கவனம் செலுத்துவதன் மூலமும் இரண்டு நோக்கங்களையும் சரிசெய்ய தயாராக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தியப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் அரசு ஊக்கவித்து, அதன் வழியே அந்நிய செலாவணியை ஈட்ட நினைக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து வந்துக்கொண்டிருந்த நிலையில், ’ஆத்மா நிர்பர் பாரத் அபியான்’ என்ற புதிய பார்வையை கரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி உருவாக்கியிருக்கிறது.

புதிய திசை வழியில் நாட்டைச் செலுத்தும் இந்தத் திட்டத்தை பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைமுறைப்படுத்த தேவையான தயாரிப்புகளைச் செய்து வந்தது என்றும், அந்தச் சிந்தனையில்தான் அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள 1959ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் 2019ஆம் ஆண்டு ஆயுத (திருத்தம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோக்கத்திற்காகவே திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற தனியார் தொழில் நிறுவனங்கள் ராணுவத்திற்குப் பயன்படும் சிறிய ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிமருந்துகளை உற்பத்தி செய்து சோதனைக்காக உந்தித் தள்ளப்பட்டன. பெரும்பாலும் அந்தச் சோதனைகள் நினைத்த அளவிற்கான வெளியீட்டைத் தந்துள்ளதாக அரசு நம்புகிறது.

இதனடிப்படையிலேயே, கடந்த மே மாதம் 12ஆம் தேதியன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ”கோவிட் -19 அச்சுறுத்தல் ஓய்ந்த உலகில் நாம் உயர்ந்த இடத்தில் நிற்போம். 21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கான கனவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு கடுமையாக உழைக்கிறது. தன்னிறைவை அடைவதை உறுதிசெய்வதன் மூலம் முன்னோக்கிச் செல்லும் வழியை அரசு கைகொண்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.

ஆத்மா நிர்பர் பாரத் அபியான் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற பாதுகாப்பு தயாரிப்புகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவருவதாக நேற்று (ஜூன்11ஆம் தேதி) நடைபெற்ற காணொலிக் கலந்தாய்வில் உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியும் அரசாங்கத்தின் திட்டத்தை நாட்டிற்கு இலைமறை காயாக உணர்த்தினார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்காக இந்தியா உலகளாவிய வெளிநாட்டு உற்பத்தியாளர்களை நம்பியுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, "இப்போது இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைக்க உள்நாட்டு உற்பத்தி தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் பல்வேறு சோதனை மையங்கள் மற்றும் ஆய்வகங்களை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க, இணையச் சந்தை வலைதளங்களையும் பயன்படுத்த உள்ளது. இந்தத் திசையில் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்படும் பீரங்கி பட்டியலை இந்தியா குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, அண்மையில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்ட எம்-777 ஹோவிட்சர்கள் துப்பாக்கிகள், கே-9 வஜ்ரா மற்றும் தனுஷ் ஆகியவற்றை நாம் காணலாம். இவை அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது. உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இறக்குமதியைக் குறைப்பது தொடர்பாகவும் பாதுகாப்புத் துறைத் தலைவர் தலைமையிலான ராணுவ விவகார அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்தாலோசித்தது இங்கே நினைவுக்கூரத்தக்கது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இறக்குமதிசெய்ய தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

2017 ஆம் ஆண்டில், மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் உள்நாட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய ஆயுத விதிகளை அறிவித்திருந்தது. இது ஆயுத உற்பத்தி உரிமங்களைக் கொண்ட உரிமைதார நிறுவனங்களின் உரிமம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற விதியை தாராளமயமாக்கப்பட்ட வகையில் மாற்றி, உரிமமானது வாழ்நாள் வரை செல்லுபடியாகும் என்று கூறியது.

தாராளமயமாக்கப்பட்ட அத்தகைய உரிமை சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் உரிமங்களுக்கு மட்டுமே பொருந்தும். கூடுதலாக, தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையால் (டிஐபிபி) வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ், டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்கள், விண்கலம், பாதுகாப்பு விமானம், அனைத்து வகையான போர்க்கப்பல்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் சிறிய ஆயுதங்களைத் தவிர பாதுகாப்பு உபகரணங்களின் தொடர்புடைய பொருள்கள் மட்டுமே இவை இசைவளிக்கும்.

சிங்கிள் பேரல், இரட்டை பேரல் துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் 100 நிறுவனங்கள், மருந்து நிரப்பப்படாத வெற்று அல்லது நேரடி தோட்டாக்கள் அல்லது இரண்டையும் உற்பத்தி செய்யும் 30 நிறுவனங்கள் தங்கள் உரிமங்களில் அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடு வரை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசின் உள்துறையால் உரிமம் பெற்றுள்ளன.

மேக்ஸ் ஏரோஸ்பேஸ், பாரத் ஃபோர்ஜ், எல் அண்ட் டி மற்றும் புஞ்ச் லாயிட் ஆகியவை ஆயுத மற்றும் வெடிமருந்துகளை சட்டப்பூர்வமாகத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களில் அடங்கும் என அரசுத் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.