திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர், காதர்பேட்டை, பெருமாள்பேட்டை, நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வணிகர் சங்கம் அறிவித்துள்ள நேரத்தை கடந்து கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாலும், அரசின் விதிகளை (முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியில்லாமல்) பின்பற்றாமல் இயங்கி வந்த 2 பேக்கரி, கோழி இறைச்சி கடை, சலூன் கடை, மருந்தகம் என 5 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: மஞ்சள் விலை சரிவு - விவசாயிகள் வேதனை!