புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் டீக்கடை எதிரில், மீமிசல் சாலை அருகே ஓட்டு வீட்டில் வசித்து வந்தவர் மாரிமுத்து - சக்தி தம்பதியினர். இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் திடீரென வீடு இடிந்து தரைமட்டமானது. இதில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டில், டிவி, மிக்சி உட்பட அனைத்துப் பொட்களும் சேதமடைந்தன.
மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், வீட்டில் உள்ள நான்கு பேரும் வீட்டின் முன்பு உள்ள அறையில் தூங்கினர். நல்வாய்ப்பாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து, சக்தி மற்றும் அவர்களின் குழந்தைகளான ராஜேஸ்வரன் (10), தர்ஷன் (7) ஆகியோர் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.