ETV Bharat / briefs

தண்ணீர் லாரி மோதி அரசு அலுவலர் உயிரிழப்பு! - Water Lorry Accident Dead In Thiruvallur

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தின் மீது தண்ணீர் லாரி மோதியதில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Water Lorry Accident Dead In Thiruvallur

author img

By

Published : Jun 19, 2020, 3:13 AM IST

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் பால் பண்ணையில் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மணி நேற்று காலை பணிக்குச் செல்லும் தனது மகளை இருசக்கர வாகனத்தில் நிறுவனத்தின் அருகே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, காவாங்கரை சிக்னலில் நின்றுகொண்டிருந்த அவர் மீது மின்னல் வேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதனால் நிலை தடுமாறிய அவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் ரூபன்ராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.