ETV Bharat / briefs

வல்லுநர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை சேர்க்க வேண்டும்!

சென்னை : கரோனா காலத்தில் பள்ளிக்கல்வி செயல்பாடு குறித்து ஆராயவுள்ள வல்லுநர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களை வல்லுநர் குழுவில் இணைக்க கோரிக்கை
1
author img

By

Published : Jun 2, 2020, 2:57 AM IST

இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கோவிட்-19 பரவல் தடுப்பு காலத்தில் பள்ளிக் கல்வி செயல்பாடு குறித்து ஆய்வு செய்து15 நாள்களுக்குள் அறிக்கை அளித்திட தமிழ்நாடு அரசு 12.5.2020 வெளியிடப்பட்ட அரசாணை மூலம் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒரு வல்லுநர்குழுவை அமைத்தது.

சுகாதாரப் பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வி செயல்பாடு பற்றி அறிக்கை அளிப்பதே இக்குழுவின் நோக்கம். தற்போது 29.5.2020 வெளியிடப்பட்ட அரசாணைக் குழுவில் இன்னும் சிலரை சேர்த்து விரிவுப்படுத்தி, அறிக்கை அளித்திட மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பிரதிநிதியோ, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதியோ இக்குழுவில் இடம்பெறவில்லை. மாறாக தனியார் பள்ளி நிர்வாகத் தலைவர்கள், தனியார் கன்சல்டன்ஸி நடத்துபவர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய பாடத்திட்ட பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் உட்பட மத்திய பாடத்திட்ட பள்ளி நிர்வாகிகள் விரிவு படுத்தப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளின் நலன் சார்ந்த செயல்பாடாகாது.

மலைக் கிராம பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பல்வேறு வகையான வாழ்வியல் சூழலில் இருந்து அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், இந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், வீடுகளிலும் எந்த அளவுதொழில்நுட்பம் பயன்படுத்த இயலும்.

பாடவேளை மாற்றம், பாட அளவு குறைத்தல் ஆகியவை இம்மாணவர்களை பாதிக்காமல் எவ்வாறு மாற்றங்களை உருவாக்க முடியும் என்பன போன்ற ஆலோசனைகளை களத்தில் நின்று பணியாற்றும் அரசுப் பள்ளியாசிரியர்களாலேயே முழுமையாகவும், சரியாகவும் வழங்கிட இயலும்.

அரசுப் பள்ளியாசிரியர் பிரதிநிதிகள், அனுபவம் வாய்ந்த துணைவேந்தர் நிலையில் இருந்து பள்ளிக் கல்வி செயல்பாட்டில் பங்களிப்பு செய்த மூத்த கல்வியாளர்கள் யாரும் குழுவில் இடம் பெறாதது தமிழ் நாட்டின் கல்வியியல் மேம்பாட்டிற்கோ, குழந்தைகளின் நலனுக்கோ நிச்சயம் பயன் தராது.

எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களையும், மூத்த கல்வியாளர்களையும் இந்தக்குழுவில் இணைக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019 - 2020 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாலும் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்நிலையில் 29.5.2020 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ள அரசாணையில் நிபுணர் குழுவில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேரைக் கூடுதலாக அரசு சேர்த்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது.

ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான்.

அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள்.

கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள். தனியார் , சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவம அரசு பள்ளிகளுக்கு இல்லையா?.

அரசுப்பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் மூத்த கல்வியாளர்கள் என்று எவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காமல் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் இந்த அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெற்ற இயக்குநர்கள் கூட ஒருவரும் இந்த அரசுக்கு தெரியவில்லையா ?. மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அதுவே நிபுணர் குழுவின் ஆலோசனைகள் உண்மையான பலனைத் தருவதாகவும், தமிழகத்தின் இன்றைய பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டங்களைத் தருவதாகவும், எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அமையும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க :’டெடியுடன்’ பேருந்தில் பயணித்த இளம்பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.