டெல்லி: இ-வே பில்களின் கால அளவை மூன்றாவது முறையாக மாற்றியமைத்து, ஜூன் 30ஆம் தேதிவரை அவை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது மார்ச் மாதம் 24ஆம் தேதிக்கு முன் எடுக்கப்பட்ட இ-வே பில்கள், ஜூன் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக மூன்றாவது முறையாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலத்திற்கு சரக்கு அனுப்பப்படும்போது, பொருள்களுக்கு பாதுகாப்பாகவும் இந்த இ-வே பில் இருக்கும். இதனால் நேர்மையாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு தேவையில்லாத பிரச்னையில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.