ETV Bharat / briefs

பொறியியல் பட்டப்படிப்பு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு!

பெரம்பலூர்: தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தா தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பொறியியல் பட்டப்படிப்பு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு!
Engineering application in online
author img

By

Published : Jul 30, 2020, 5:48 PM IST

பொறியியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி கூடிய பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை குறித்த மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவுசெய்யப்பட்டு, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இணையதள விண்ணப்ப பதிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மேல்நிலை வகுப்பிற்கான தேர்வு நுழைவுச்சீட்டு மாற்று சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், மாத வருமான சான்றிதழ், சிறப்பு விளையாட்டு சான்று, அதற்கு இணையான சான்றிதழ் சிறப்பு முன்னாள் ராணுவத்தினர் சான்று, அதற்கு இணையான சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் எடுத்துவர வேண்டும் எனவும் மாணவர்கள் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் பயிற்சியுடன் கூடிய முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கான முதலாமாண்டு பட்டைய சேர்க்கை அமைப்பியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, கணிப்பொறியியல் துறை, இயந்திரவியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெறவுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது” என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.