ETV Bharat / briefs

சென்னை- 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்கள் வேலை நிறுத்தம்

author img

By

Published : Jul 1, 2020, 8:25 PM IST

சென்னை: பல மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள், அரசின் உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என இன்று (ஜூலை 1) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Ambulance drivers protest

சென்னையில் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்படுவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு அழைக்கப்பட்ட பலருக்கும் சரியான உணவு வழங்கவில்லை, தங்குவதற்கு போதுமான இட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இன்று(ஜூலை 1) சென்னை பெரியமேட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட 108 வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும் சேவை பாதிப்பிற்கு உள்ளானது.

இது தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் ஒரு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். எங்களுக்கும் இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். தங்குவதற்கு இடமின்றி வாகனத்தில் படுத்து உறங்குகிறோம். பெண் உதவியாளர்கள் இயற்கை உபாதைகளுக்காகக் கூட எங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

நாங்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் திரும்பி அனுப்பப்டாமல் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. இதையெல்லாம் அரசு கருத்தில் கொள்ளவில்லை” என்றார்.

கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுபவர்களில் எங்களையும் களப்பணியாளர்கள் எனக் கருத வேண்டும். எங்களில் யாருக்கும் கரோனா தொற்றால் உயிர் இழப்பு ஏற்பட்டால் அரசால் 50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். என்கிற கோரிக்கையையும் இவர்கள் முன் வைக்கிறார்கள். இவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்பதை அரசு புரிந்துகொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.