இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த 16ஆம் தேதி இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் சீனப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில், பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சீனாவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் இந்தியாவில் அதிகம் உபயோகிக்கப்படுவதால், அவற்றையும் உபயோகிக்க வேண்டாம் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான், தான் உபயோகித்து வந்த சீன செயலிகளான ஹலோ, டிக் டாக் ஆகியவற்றில் இருந்து தனது கணக்கை நீக்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இந்த இரண்டு செயலிகளிலும் உள்ள என்னுடைய கணக்கை நீக்கிவிட்டேன். நீங்கள்?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Deleting my accounts in #TikTok #Helo . You ? pic.twitter.com/uMopEXM4bZ
— Ghibran (@GhibranOfficial) June 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deleting my accounts in #TikTok #Helo . You ? pic.twitter.com/uMopEXM4bZ
— Ghibran (@GhibranOfficial) June 18, 2020Deleting my accounts in #TikTok #Helo . You ? pic.twitter.com/uMopEXM4bZ
— Ghibran (@GhibranOfficial) June 18, 2020
இதையும் படிங்க:த்ரிஷாவின் திடீர் முடிவு - சோகத்தில் ரசிகர்கள்!