கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதனால், கரோனா நடவடிக்கையால் விவசாயிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் அரசு செயல்படுகிறது.
இதற்காக விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருள்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள், விவசாய இயந்திரங்கள், வாடகை இயந்திர மையங்கள் ஆகியவைகளுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாபே நிறுவனத்தின் ஜே.பார்ம் இணைந்து பெர்குஷன் மற்றும் எய்சர் டிராக்டர்கள், வேளாண் இயந்திரங்களை, சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாள்கள் வாடகையின்றி விவசாயிகளுக்கு கொடுத்துள்ளனர் .
டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தேவைப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து தங்களது மூன்று ஏக்கர் வரை உள்ள நிலங்களை இலவசமாக உழுது கொள்கின்றனர் .