தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 982 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் வந்த மூன்று பேருக்கும், சென்னையிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் நான்கு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 367 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.