விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த வாரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் எதிரில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முழு ஊரடங்கு விதியை சற்றும் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து அதிக நபர்கள் பூ வியாபாரம் செய்ய இந்த மார்க்கெட்டிற்கு வருகை தருவதால், அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.