ETV Bharat / briefs

மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்! - Fishermen protest In Cuddalore

கடலூர்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை வாங்கிச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்ததால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் உதவி மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Fishermen protest In Cuddalore
author img

By

Published : Jul 10, 2020, 4:35 PM IST

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒன்றாம் தேதி முதல் தடையை மீறி மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையுடன் இருந்த படகுகளை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அலுவலர்களின் வாகனங்களை சிறை பிடித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில், சுருக்கு மடி வலைகள் தடை செய்யப்பட்டது அரசின் கொள்கை முடிவாகும். இதில் யாரும் தலையிட முடியாது. அதனால் இந்த வலைகளை பயன்படுத்தி யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் மீறி நேற்று மீனவர்கள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

பின்னர் மீன்வளத்துறை அலுவலர்கள் நேற்று சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மீன்களை எங்கும் விற்பனை செய்யக்கூடாது, அந்த மீன்களை வியாபரிகள் வாங்கக்கூடாது என உத்தரவிட்டனர். ஆனால், அதையும் மீறி மீனவர்கள் மீன்களை விற்பனை செய்தனர். இதையறிந்த மீன்வளத்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை வாங்கிச் சென்ற 21 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள், வியாபாரிகள் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன்பிறகு மீன்வளத்துறை அலுவலர்களின் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதித்து விடுவித்தனர்.

இப்பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடலூரில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களும் அரசு விதிகளுக்கு உட்பட்டு மீன் பிடிக்கும் மீனவர்கள் இரண்டு பிரிவாக உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு தற்போது சமாதானம் அடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் மீண்டும் மோதலை உண்டாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: மத்திய சுகாதாரக் குழுவினர் முதலமைச்சருடன் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.