நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே நண்டலாறு பாலத்தில் சுருக்குமடி வலை, அதிவேக விசைப் படகு இயக்க அனுமதி வழங்கக்கோரி சந்திரபாடி, சின்னூர்பேட்டை கிராம மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரியின் காரைக்கால், தமிழ்நாடு எல்லையான நண்டலாறு பாலத்தில் நடைபெரும் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.