ETV Bharat / briefs

சட்டத்திற்கு புறம்பாக அரசு செயல்படுகிறது: மீனவர்கள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 17, 2020, 11:50 PM IST

நாகை: அரசு தரப்பில் நடைபெற்றுவரும் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு செயல்படுகிறது என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Fisherman Fishing Net Issues In Nagai

நாகை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாள்களாக பிரச்னை நிலவி வருகிறது. சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அனுமதி வழங்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக இரு தரப்பினரிடையே அவ்வப்போது சில மோதல்களும் நடக்கின்றன. அரசு தரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது, அதற்கு பதிலாக அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு மூன்று மாற்று திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராம மீனவ பிரதிநிதிகளை அழைத்து அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தையானது இரவு 10 மணி மேலும் தொடர்ந்து வருகிறது.

இந்தச் சூழலில் அரசு நீதிமன்றம் உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ஒரு தரப்பு மீனவர்கள் குற்றஞ்சாட்டி கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைக்கு ஆதரவு கேட்டு சட்டத்துக்கு புறம்பாக எழுதி கேட்பதாகவும், அதுவரை மீனவர்களை மண்டபத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கமால் காவல் துறையினரை கொண்டு தடுப்பதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: பெரியார் சிலைக்கு செருப்பு மாலை: திமுக, விசிக சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.