மகளிர் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில், ஜப்பான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதைத்தொடர்ந்து, நெதர்லாந்து வீராங்கனை மார்டின்ஸ் பேக் ஹீல் மூலம் கோல் அடித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜப்பான் வீராங்கனை ஹஸேகாவா (Hasegawa) அபாரமாக கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதியில் ஜப்பான் அணிக்கு கிடைத்த வாய்ப்பை கோலா மாற்ற தவறியது. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை, மார்டின்ஸ் கோலாக மாற்ற, நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் இப்போட்டியில் தோல்வி அடைந்ததை எண்ணி ஜப்பான் வீராங்கனைகள் களத்தில் கண்ணீர் வடித்தனர். இதைப்பார்த்த நெதர்லாந்து வீராங்கனைகள், அவர்களை ஆரத்தழுவி சமாதானம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.