ஈரோடு கடைவீதி பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி சந்தை மிகவும் குறுகலானதாகவும், காற்றோட்டமும் இல்லாத காரணத்தினால் நோய்ப்பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தினசரி சந்தை, தற்காலிகமாக ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
இதனிடையே பேருந்துகள் இயக்கப்பட்டதன் காரணமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி சந்தை தற்காலிகமாக ஈரோடு வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதான வளாகத்திற்கு மாற்றப்பட்டது. சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 700 காய்கறிகள், பழக்கடைகளுக்கு குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கப்பட்டு கடந்த 20 நாள்களாக காய்கறிச் சந்தை செயல்படத் தொடங்கியது.
அதேபோல் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டபோது வியாபாரி ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சந்தை நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் 7 மணிவரை செயல்பட்டு மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது அனைத்து தரப்பினரும் காய்கறி வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி, தனியார் மருத்துவமனை இணைந்து காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா நோய் இருக்கிறதா? என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனிங் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது. இ