ETV Bharat / briefs

பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி ரிப்போர்ட்டர் உள்பட இருவர் கைது!

கன்னியாகுமரி: சாலையோரம் பழக்கடை நடத்தி வரும் பெண்ணிடம் மதுபோதையில் தவறான உறவுக்கு அழைத்த போலி செய்தியாளர் உள்ளிட்ட இருவர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Fake Reporter Arrested In Kanniyakumari
Fake Reporter Arrested In Kanniyakumari
author img

By

Published : Sep 3, 2020, 9:25 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுஜி (30). இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலையோரம் பழக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு அங்கு வந்த இருவர் மதுபோதையில் பத்திரிகையாளர் (கடல் சிற்பி) எனக் கூறி இலவசமாக பழங்கள் கேட்டதோடு தகாத வார்த்தைகளால் பேசி தவறான உறவுக்கும் அழைத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பழக்கடை பெண் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர் இருவரையும் பிடித்து விசாரனை செய்தனர்.

அதில், அந்த நபர்கள் பொய்கை நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பானு சுந்தர் என்பதும் அவரிடமிருந்து கடல் சிற்பி பத்திரிக்கையின் நிருபர் அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டது.

மற்றொருவர் அவரது நண்பர் கணேசன் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் இருவர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.