ஃபேஸ்புக், அதன் உறுப்பு நிறுவனமான இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் 'வாக்காளர் தகவல் மையம்' எனும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். அதில் வாக்களிக்க பதிவுசெய்தல், வாக்குச்சாவடிகள் மற்றும் அஞ்சல் மூலம் வாக்களித்தல் குறித்த விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள முடியும். இது மாநில தேர்தல் அலுவலர்கள், உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களிடமிருந்து கிடைக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, துல்லிய தகவல்கல் பயனாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ட்ரம்பின் சர்ச்சைப் பதிவு: நடவடிக்கை எடுக்க ஃபேஸ்புக்கின் கிளை அமைப்பு வலியுறுத்தல்!
முன்னதாக, கரோனா நெருக்கடியைச் சமாளிக்க, கரோனா உதவி மையத்தை தனது தளங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் நிறுவி செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை முடிவுகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தவறான தகவல்களை வெளியிடுவதற்கான வாய்ப்பையும் இரட்டிப்பாக்கும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.