ETV Bharat / briefs

நிலத்திற்காக சித்தப்பாவைக் கொலை செய்த மகன்கள்! - Murder case

வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் 12 சென்ட் நிலத்திற்காக தனது சொந்த சித்தப்பாவை மகன்கள் கொலை செய்துள்ளனர்.

murdered for land problem
murdered for land problem
author img

By

Published : Jun 11, 2020, 10:48 PM IST

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் வசிப்பவர்கள் கிருஷ்ணன்(65), சின்னம்மா தம்பதி. இந்த கிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.

கிருஷ்ணன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று, தற்போது தனது சொந்த ஊரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணனும் அவரது அண்ணன் தாமோதரனும் ஆறு ஏக்கர் நிலத்தில், ஒன்றாக விவசாயம் செய்து வருகின்றனர். அதேசமயம் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட 12 சென்ட் இருவருக்கும் பொதுவில் உள்ளதால், தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில் அந்த 12 சென்ட் பொது இடத்தில் கிருஷ்ணன், தண்ணீர் தொட்டி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் நேற்று(ஜூன் 10) மாலை அண்ணன், தம்பி இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

இதில் தாமோதரனின் மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோர்; கிருஷ்ணன் அவரது மனைவியை சரமாரியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பனமடங்கி காவல் துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்போது கிருஷ்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சின்னம்மா மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாமோதரன், அவரது மகன்கள் ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.