ETV Bharat / briefs

பூட்டிய எல்லைகளை திறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

பெர்லின்: ஐரோப்பாவில் மூடப்பட்டுள்ள எல்லைகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பியர்களுக்கு மட்டும் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

europe-reopens-many-borders-but-not-to-americans-asians

author img

By

Published : Jun 15, 2020, 1:14 AM IST

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச நாடுகள் தங்களது எல்லைகளை மூடியுள்ளன.

இந்நிலையில், மூன்று மாத முடக்கத்திற்கு பிறகு பல நாடுகள் சக ஐரோப்பிய நாடுகளுக்கு தமது எல்லைகளைத் திறந்திருப்பதால் ஐரோப்பாவில் மீண்டும் இயல்புநிலை திரும்பத்தொடங்கியுள்ளது.

ஆனால், ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லையை தொடர்ந்து அமெரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதித்தத் தடையை தொடர்ந்து அமலிலேயே வைத்திருக்க முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும், பொதுவாக பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் பயணப் பகுதியில் அனுமதிக்கப்படுகின்ற நாடுகளுக்கும் இந்த எல்லை திறப்பு பொருந்தும்.

கடந்த வாரம் இது குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றிய உள்துறை விவகார ஆணையர் யல்வா ஜோஹன்சன், "விரைவில் எல்லைகள் திறக்கப்படும் வேண்டும்" என்றார். இன்று இந்த முடிவு உறுதியானது. கிரீஸ் போன்ற சுற்றுலா சார்ந்த மத்தியதரைக் கடல் நாடுகள் இதனை தவிர்க்க ஆர்வமாக உள்ளன.

கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ், "மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கிறார்களா என்பதையும், கிரேக்கத்தை ஒரு பாதுகாப்பான இடமாக நாம் வைத்திருக்க முடியுமா என்பதையும் பொறுத்துதான் எல்லைத் திறப்பது முடிவு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார். பின்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின்போல் ஸ்வீடன் அரசும் பயணக் கட்டுப்பாடுகளை அமலில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது.

மிக அதிகமான பாதிப்பை கண்டிருந்த ஸ்பெயின் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக தன் நாட்டு எல்லைகளை திறக்க சிந்தித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, ஜெர்மானியர்களை அதன் பலேரிக் தீவுகளுக்கு மட்டும் சுற்றுலா மேற்கொள்ள அனுமதித்துள்ளது.ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்கு அளித்திருக்கிறது.

செக் குடியரசு, போர்ச்சுகல் மற்றும் போலந்தின் சிலேசியா பிராந்தியங்கள் தொடர்ந்து எல்லைகளை திறந்துவருகின்றன. ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு ஆஸ்திரியா இன்று தனது எல்லைகளை திறக்க இருக்கிறது. ஆனால், அண்டை நாடான இத்தாலியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் லோம்பார்டிக்கு மட்டும் பயண எச்சரிக்கையை வைத்திருக்கிறது.

பிரான்ஸ் அரசு, பிரிட்டனைச் சேர்ந்தவர்களை இரண்டு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு மட்டும் விதியை விதித்திருக்கிறது. பிரிட்டன் அரசு, தனது நாட்டுக்குள் நுழையும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட தேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால் கோடையில் பிரிட்டனுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

டென்மார்க் அரசு, ஜெர்மனி, நார்வே மற்றும் ஐஸ்லாந்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மட்டும் அனுமதிக்கவுள்ளது. நார்வே, ஸ்வீடனுடனான தனது நீண்ட எல்லையை தொடர்ந்து மூடி வைத்திருக்கும் முடிவில் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளைக் கண்டுள்ளதாகவும், உலகின் 7.8 மில்லியன் தொற்றுநோயாளிகளில் ஐரோப்பிய ஒன்றியம் ஏறத்தாழ 2.04 மில்லியனைக் கொண்டுள்ளதாவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.