முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி இவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.