நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 95 காசுகளிலிருந்து 15 காசுகள் குறைத்து 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த 8ஆம் தேதி 4 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 நாட்களில் 75 காசுகள் வேகமாக உயர்ந்து 4 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில், அசைவம் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறையும் என்பதால் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 95 காசுகளில் இருந்து 15 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது "புரட்டாசி மாதம் தொடங்கியதன் காரணமாக மக்கள் பலர் சைவ உணவிற்கு மாறியதால் முட்டைகள் தொடர்ந்து அதிகளவு தேக்கம் அடைந்து விற்பனை குறைந்து விலை குறைந்துள்ளது, இவ்விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறைய வாய்ப்புள்ளது " எனத் தெரிவித்தனர்.