ETV Bharat / briefs

அமெரிக்கர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம்! - இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு

கோவை: அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்; இனவெறியைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

DYFI Supporting Protest American genocide In Covai

author img

By

Published : Jun 4, 2020, 7:06 PM IST

கோவை, சிவானந்தா காலனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அலுவலகம் உள்ளது. அங்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டித்தும்; அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரித்தும்; அங்கு நடக்கும் இனவெறியைக் கண்டித்தும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, இனவெறியை நிறுத்தவேண்டும் என்றும்; அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்றும்; ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டிக்கிறோம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜனகராஜ், கிளை செயலாளர் முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலுக்குப் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.