புதுக்கோட்டை நகர் பகுதியான திருக்கோகர்ணத்தில் ஆட்டோ ஒன்று தண்ணீர் குழாய் மீது மோதி நின்றுகொண்டிருந்தது. இதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற ஒருவர் இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது 51 வயதுடைய ஆண் தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், புதுக்கோட்டை சாந்தநாத புரத்தைச் சேர்ந்த கும்பி (எ) நாகராஜன் (51) என்பதும் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுபவர் என்பதும் இவர் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்ததால் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும், நேற்று இரவும் வழக்கம்போல் மதுபோதையில் ஆட்டோ ஓட்டி நிலைதடுமாறி குடிநீர் குழாய் மீது மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மாணவர்கள் அடையாள அட்டை, ஹால் டிக்கெட்டை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்!