விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுகவினர் கோஷமிட்டனர்.
அதிமுகவின் கோஷத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், திமுகவைச் சேர்ந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவலர்கள் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம் செய்தனர். எனினும் அப்பகுதியில் பரபரப்பு தொடர்கிறது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக நகராட்சி செய்த காரியம்!