தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில், கிராம உதவியாளராக தன்னை நியமிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துரைராஜை கிராம உதவியாளராக நியமிக்கக் கோரி தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அமல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக துரைராஜ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
அந்த வழக்கில், 2019ஆம் ஆண்டு வரை பாலக்கோடு பகுதியில் கிராம உதவியாளர் பதவிக்கு யாரும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், நான்கு வார காலத்திற்குள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்