தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் காவல் துறையின் செயல் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உயர் அலுவலர்கள் காவல் துறையினர் பொதுமக்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்து காவலர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் கோபாலச்சந்திரன் ரோந்து பணிக்கு 10 ஒலிபெருக்கிகளை காவலர்களுக்கு வழங்கி ஊரடங்கு உத்தரவால் எட்டு மணிக்கு அனைத்து கடைகளையும் அடைக்க வலியுறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களை காவல் துறையினர் மரியாதையுடன் அன்பாக நடத்த வேண்டும், காவல் துறையினரின் பெயரை கலங்கப்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். தொடர்ந்து காவல் துறையினர் மக்களின் நண்பன் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என எடுத்துரைத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.