ETV Bharat / briefs

தொழில் முனைவோருக்கான கரோனா சிறப்பு கடனுதவி – தொடங்கிவைத்த ஓபிஎஸ் - small scale entrepreneurs in theni

தேனி: ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொடங்கிவைத்தார்.

தேனியில் ரூ.1.5 கோடி மதிப்பில் தொழில் முனைவோருக்கான கரோனா சிறப்பு கடனுதவி – ஓ.பி.எஸ் துவங்கி வைத்தார்.

author img

By

Published : Jun 27, 2020, 8:43 PM IST

தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இத்திட்டம் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களைச் சார்ந்த 30 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, சிறப்பு நிதியுதவித் தொகுப்பின் மூலம் 3 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 407 பயனாளிகள் பயன்பெறக் கூடிய வகையில் கரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 240 நபர்களுக்கு, ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தம் 1.20 கோடி ரூபாயும், 12 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 240 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு 1.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 18 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

ஆடை தயாரிப்பு, பால் பொருள்கள் உற்பத்தி, கலைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழில் குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 4 குழுக்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படவுள்ளது.

குடிபெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிவந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 50 நபர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்படவுள்ளது.

ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு/உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 500 நபர்கள் வீதம் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்குத் தலா 10 லட்சம் ரூபாய் மூலதன மானியமாக வழங்கப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக நபர்களைத் தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாகக் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி வழங்குவதற்காக மொத்தம் 37.50 லட்சம் ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்படவுள்ளது.

இச்செயல்பாடுகளில் முதற்கட்டமாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் 518 தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி மூலதனக் கடனாக 120 லட்சம் ரூபாயும், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலமாக 243 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் தொழில்முனைவோர்களுக்கு உற்பத்தி மூலதனக் கடனாக 37.50 லட்சம் ரூபாய் உள்பட மொத்தம் 761 பயனாளிகளுக்கு 157.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கிட பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தொடக்கமாக 10 பயனாளிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.