அரியலூர் அருகே புஜங்க ராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று (செப்.7) கோவிலூர் கிராமத்தில் மின்மாற்றியில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி படித்துள்ள அவரது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.