கிருஷ்ணகிரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், எஸ்டிபியின் மாவட்ட செயலாளருமான அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.
தமுமுக மாவட்ட தலைவர் நூர்முஹம்மது வரவேற்புரை ஆற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் சனாவுல்லா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, சிபிஐ கட்சி கண்ணு, சலாமத், முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு, இந்தி சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, காவிரி நதிநீர் உரிமையில் தொடர் துரோகம், ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழி சாலை உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹமத், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமார், தமிழ்மாநில ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதம் பாஷா, இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட பொறுப்பாளர் அன்வர் பாஷா தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நகர செயலாளர் தங்கம் சக்திவேல், விசிக ஊடக பிரிவு மாநில துணை செயலாளர் திராவிட ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.