ETV Bharat / briefs

"ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிட தடை விதிக்க வேண்டும்" - தீபா வழக்கு! - Deepa filed case

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம், வெப் தொடர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், நேரடி வாரிசுமான ஜெ. தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம், வெப் தொடருக்கு வெளியிட தடை விதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், நேரடி வாரிசுமான ஜெ. தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 8, 2020, 12:07 AM IST

Updated : Jul 8, 2020, 12:38 PM IST

அம்மனுவில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் "தலைவி" என்னும் இந்தியில் "ஜெயா" என்றும் என்ற பெயரில் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எல்.விஜய்யும், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

அதேபோல, ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற "வெப் சீரியல்" ஒன்றை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படமும், வெப் தொடர்களும் தனது அனுமதி இல்லாமல் எடுக்க தடை விதிக்க வேண்டும்" என ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவிக்கப்பட்ட தீபா தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அனிதா சிவக்குமாரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் "தலைவி" திரைப்படமும், "குயின்" வெப் தொடர்களும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறுவது தவறு, பொதுத் தகவலின் அடிப்படையில் திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

அதில், ஜெயலலிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகளும், அவரது சகோதரருக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் வெப் தொடர்களில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது அவரது புகழுக்கு வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

பொதுப்பணியில் அர்பணித்துக் கொண்டவரின் திருமணம், குடும்பம், வாரிசுகள், படிப்பு குறித்து வெளிப்படுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தன்னை பற்றிய விவரங்களை அதிகமாக வெளியிட விரும்பாதவர். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுப்பது என்பது தவறானது.

மேலும், நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக எடுக்க அவரது மனைவி முத்துலெட்சுமியிடம் அனுமதி பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

அதனால் ஜெயலலிதாவின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் திரைப்படமும், வெப் தொடரும் எடுக்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதில் மனுவை ஏற்ற நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதத்திற்காகவும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Jul 8, 2020, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.