தமிழ்நாட்டில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை தீர்க்க எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், எடுக்கவில்லை எனக் கூறி தமிழ்நாடு அரசை கண்டித்தும், குடிநீர் கிடைக்காத பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்க வலியுறுத்தியும், மழை காலத்திற்கு முன் நீர் நிலைகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்களை கண்டித்தும், அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.