தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயியான இவர், கால்நடைகளை வளர்த்துவருகிறார்.கிராமத்தையொட்டியுள்ள வனத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார்.
இந்நிலையில், திகினாரை குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக மாடுகளை அழைத்துச் சென்றபோது, குட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை மாடு ஒன்று கடித்ததில், அதன் வாய்ப்பகுதி சிதைந்து ரத்தம் சொட்டியது.
பின்னர், அங்கு வந்த கால்நடை மருத்துவர் மாட்டுக்கு சிகிச்சை அளித்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நாட்டு வெடிகுண்டு வைத்தவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:அடையாளம் தெரியாத விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு