ETV Bharat / briefs

அரசின் தடையை மீறி கன்வார் யாத்திரைக்கு வரும் பக்தர்கள்!

லக்னோ : கோவிட் -19 தொற்றுநோயின் பரவல் காரணமாக கன்வார் (சிவ பக்தர்கள்) யாத்திரை ரத்து செய்யப்பட்டதையடுத்து உத்தரப் பிரதேசத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்வார் யாத்திரைக்கு உ.பி., அரசு தடை - மீறி வரும் பக்தர்கள்!

author img

By

Published : Jul 7, 2020, 5:20 PM IST

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. மூன்றாம் கட்டப் பரவலை அடைந்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான உள்ளக எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கன்வார் யாத்திரை இந்தாண்டு தடைசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர், ஷாம்லி ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்களான உத்தரகாண்ட், ஹரியானா, பிகார் ஆகியவற்றின் வழியே எல்லையோர மாவட்டங்களின் ஊடாக சிவ பக்தர்கள் உத்தரப் பிரதேசத்திற்கு நுழைவதைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய முகேஷ் கோஸ்வாமி என்பவர் கூறியதாவது, "இந்த மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகைதருவது வழக்கம். பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாதுகாப்பு வீரர்கள், மகளிர் காவல் படை, மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஒவ்வொரு ஆண்டும் இங்கே நிலைநிறுத்தப்படுவர். இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கன்வார் யாத்திரையை அரசு ரத்துசெய்துள்ளது .

கன்வார் யாத்திரை ரத்துசெய்யப்பட்டதால் கங்கை நதியின் புனித நீரை எடுக்க சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ஷ்ரவனின் (ஜூலை மாதத்தின் இந்துமத பெயர்) முதல் திங்கட்கிழமை யாரும் வரவில்லை. இந்தாண்டு ஷ்ரவன் மாதத்தில் வீட்டிலேயே இருந்து இறைவனை வணங்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கன்வார் யாத்திரை ரத்துசெய்யப்பட்டது தொடர்பாக உத்திரப்பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஷாம்லி, பானிபட் ஆகிய இரு மாவட்ட நீதிபதிகளின் இடையே நடந்த கலந்தாலோசனையின் அடிப்படையில் ​​பிகார், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் கன்வாரியாக்கள் ஷாம்லியில் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டது.

மேலும், கோவிட்-19 பரவுவதைத் தடுக்க இந்த ஆண்டு கன்வர் யாத்திரையை ரத்துசெய்ய உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஹரியானா முதலமைச்சர்கள் கடந்த மாதம் ஒருமித்த கருத்துக்கு வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. கன்வாரியாக்கள் மாவட்டங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முசாபர்நகர், ஷாம்லியின் எல்லைகள் முறையே உத்தரகாண்ட், ஹரியானாவுடன் சீல் வைக்கப்பட்டுள்ளன.

ஹரித்வார் நோக்கி வரும் கன்வாரிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி திருப்பியனுப்ப டெல்லி-ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையிலும், உத்தரகாண்ட் எல்லையில் உள்ள பிற இடங்களிலும் 58 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஹரித்வார் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஷாம்லியில், பானிபட்-காதிமா நெடுஞ்சாலையில் உள்ள யமுனா பாலத்தையும் காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு வலியுறுத்திவந்தாலும், கன்வாரியாக்கள் ஹரித்வாரை நோக்கி பெருந்திரளாக வந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.