ETV Bharat / briefs

கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி பருத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 23, 2020, 8:18 PM IST

தூத்துக்குடி : பருத்தியை கொள்முதல் செய்யும் நிலையங்களை அமைத்துத் தர வலியுறுத்தி கயத்தாறில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி பருத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி பருத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் அறுவடை செய்யப்படும் பருத்தியின் விற்பனையை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஆனால், தற்போது ஏலம் எடுக்கும் தனியார் தரப்பினர் விவசாயிகளிடமிருந்து பருத்தியை மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, வெளியே அதிக விலையில் விற்பனை செய்வதாக அறிய முடிகிறது.

அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாத காரணத்தால் ஒருபக்கம் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் நட்டம் அடையும் சூழலும், இன்னொரு பக்கம் அறுவடை செய்யப்பட்ட பருத்திகளை பாதுகாக்க முடியாத நெருக்கடியும் பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு முதன்மை சாலையில் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் ஓசைகள் சங்கம் தென் மண்டல அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதன்போது பேசிய பருத்தி விவசாயிகள், “தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்க விவசாயிகள் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது அடுத்த சிக்கலை விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.

பருத்தி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாத காரணத்தால் தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்யும் நிலை நீடிக்கிறது.

இதனால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,000 முதல் ரூ.1,500 வரை விலைக் குறைத்து தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதால் பல விவசாயிகள் பெருத்த நட்டத்தை அடைந்துள்ளனர். மேலும், விலை வீழ்ச்சியால் கூலித் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்துவந்த பலரும் இதனால் குத்தகை செலுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலை தொடராமல் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் நிலையம் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அத்துடன் 2019-2020 ஆம் ஆண்டு விவசாயிகள் செலுத்திய காப்பீடு இழப்பீடு தொகையை உடனடியாக அரசு தர வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதில் 50க்கு மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.