திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகம் மூடப்பட்டது.
இதேபோல், பொதுமக்கள் சிலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த திங்கள்கிழமை முதல் மன்னார்குடி நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு குறைக்கப்பட்டு கடைகள் 6 மணியுடன் மூடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் நகராட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி பொறுப்பு ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மன்னார்குடி நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுவர்கள் விளையாட்டுப் பொருளில் ஆபாசப் படங்கள்: பெற்றோர் அதிர்ச்சி!