ETV Bharat / briefs

நாமக்கல்லில் அரசு ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி: மண்டல அலுவலகம் மூடல்

நாமக்கல்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona infection confirmed to government employee in Namakkal

author img

By

Published : Jul 2, 2020, 3:04 PM IST

Updated : Jul 2, 2020, 4:49 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நோய் தொற்று மேலும் பரவமால் தடுக்கும் விதமாக மண்டல அலுவலகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வரும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் சுகாதார துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கவும், அலுவலகத்தில் உடன் பணியாற்றிய அனைவரையும் பரிசோதனை முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

Last Updated : Jul 2, 2020, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.