ETV Bharat / briefs

சேலத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா உறுதி - Salem corona Updates

சேலம்: மேட்டூர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Affected By 57 People In Salem
Corona Affected By 57 People In Salem
author img

By

Published : Jun 30, 2020, 4:01 PM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் அடுத்த பண்ணவாடி கிராமத்தில், செல்வம்(31) என்பவர் கடந்த 21ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மருத்துவர்கள் இருவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 28) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள 73 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த கிராமத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நாவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு நுரையீரல் கோளாறு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்: கொலையா என விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.