நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் இங்கு பணியாற்றும் எட்டு மருத்துவர்களை 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூர் பகுதிக்கு திடீரென இடமாற்றம் செய்து அலுவலர்கள், நள்ளிரவு நேரத்தில் உத்தரவிட்டார்கள்.
இதனைக் கண்டித்து, மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணும் வரை, போராட்டம் தொடரும் எனவும் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.