பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்தவர் பழனியாண்டி (60). இவர் நேற்று (ஜூலை9) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அதே தெருவில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் இறந்துபோன பழனியாண்டியின் சடலத்தை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாத வகையில் தடுப்பு சுவர் ஒன்றை எழுப்பியுள்ளார்.
இதனிடையே இறந்தவரின் உறவினர்கள், பொதுமக்கள் தடுப்பு சுவர் எழுப்பிய பெரியசாமியிடம் பயணத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தடுப்பு சுவரை அகற்ற ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தடுப்பு சுவர் எழுப்பிய பெரியசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
மேலும் பெரியசாமி அந்த இடத்திற்கு பட்டா வைத்துள்ளதால் அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் தடுப்பு சுவரும் அகற்றப்படாமல் உள்ளது.