பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், கிருமி நாசினி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பணிகளை கிராமப்புறங்களில் மேற்கொள்வது குறித்து தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை மற்றும் பெரம்பலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.