ETV Bharat / briefs

ஆன்லைன் கல்விக்கு தடை கோரி காங்கிரஸ் நூதன போராட்டம்

தூத்துக்குடி: தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் ஆன்லைன் கல்வியை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Jun 11, 2020, 12:01 AM IST

  தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் கல்விக்கு தடைக் கோரி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ் குமார், மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திருவோடு ஏந்தி வந்தனர். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசின் சமச்சீர் கல்விக்கு எதிராக தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் பாடம் நடத்துவதை தடை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்திவருகின்றன. ஆனால் இவர்கள் கற்கும் கல்வியை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கற்பதற்கு சுமார் 6 மாத காலமாகிவிடும். இது அரசின் சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது. இந்த கல்விமுறை சமச்சீர் அற்ற நிலையை உருவாக்கும். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், ஆன்லைனில் கல்வி கற்க அதிக நேரம் மாணவர்கள் செல்போன் அல்லது மடிக்கணினியில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு அதிக மன அழுத்தமும்‌, உடல் சோர்வும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் கல்வி கற்கும் நிலை உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இது மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. எனவே ஆன்லைன் கல்வி முறையை தடை செய்ய வேண்டும் என தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.