தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மன்மதன் (17). இவருக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாணவர் மன்மதன்,தனது நண்பர்களுடன் இணைந்து பள்ளி முடிந்து வெளியே வந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் மூவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களிடையே மோதல்: சக மாணவர்களுக்கு கத்திக் குத்து - school students
தேனி: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேருக்கு கத்திக் குத்து, காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மன்மதன் (17). இவருக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாணவர் மன்மதன்,தனது நண்பர்களுடன் இணைந்து பள்ளி முடிந்து வெளியே வந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் மூவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மன்மதன் தனது நண்பர்கள் 3 பேரை இன்று மாலை பள்ளி முடியும் வேளையில் வரவழைத்துள்ளார். அப்போது வகுப்பு முடிந்து வெளியில் வந்த ராகுல், அஜய், முல்லைவேந்தன் ஆகிய 3 பேரையும் அங்கு வந்த மன்மதனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் முல்லைவேந்தன், அஜய் ஆகிய 2 மாணவர்கள் ரத்தகாயங்களுடன் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். ராகுலுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைவேந்தன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள கன்டமனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிண்றனர்.
Conclusion: பள்ளிமாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திகுத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.