நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 75 ஆயிரம் வழங்க வேண்டும், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ 15 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை மத்திய அரசு நிறுத்தி வைக்கவேண்டும் என 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.