ராமநாதபுரம் அரண்மனை முன்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ”கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதை அரசு நிர்ணயம் செய்வதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
கரோனாவால் வேலை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏழாயிரத்து 500 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். எல்.ஐ.சி, வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விடும் முடிவை அரசு கைவிட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.