ETV Bharat / briefs

சென்னை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க குழு அமைப்பு! - Chennai Government School Admission

சென்னை: பள்ளிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

chennai corporation Commissioner prakash

author img

By

Published : Aug 19, 2020, 4:54 AM IST

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 200 மழலையர் வகுப்புகள் இயங்கிவருகின்றன.

இந்த கல்வி ஆண்டில் சென்னை பள்ளிகள் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று இடை நிற்றல் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கவும் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் தலைமை ஆசிரியரின் தலைமையில் ஆசிரியர்களை உறுப்பினராக கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்ல குழந்தைகளின் விவரங்களை சேகரித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாள்தோறும் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் 50 குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் விவரங்களை உரிய படிவத்தில் சேகரித்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்லா குழந்தைகளை சென்னை பள்ளியில் சேர்ப்பதற்கு தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் அப்பகுதிக்குரிய மகளிர் சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள சமுதாய ஒருங்கிணைப்பாளர் உடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளலாம். குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்தும் போது தடுப்புக்கான மாநில மற்றும் மத்திய அரசு அளிக்கும் அனைத்து அறிவுரைகளும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் செயல்பாடுகளை உதவி கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியர்களும் எவ்வித தொய்வும் இன்றி கண்காணிக்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.