ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பசுமை இந்தியா திட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சி மாவட்டத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சார்பில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 13) திருநாவுக்கரசர் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி வசம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் இந்த மரக்கன்றுகள் இன்று(ஜூலை 13) கல்லூரி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிட்ஜித் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டார். இந்தக் கல்லூரியின் சமூக நலத்துறை சார்பில் 28 கிராமங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் இந்த மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியின்போது கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறை பேராசிரியரும், இருங்கலூர் பங்கு தந்தையுமான இன்னொசன்ட், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பெஞ்சமின் இளங்கோவன், முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன், ரெக்ஸ், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுதிறனாளிகளுக்கு வேஷ்டி, சேலை, உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்