அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஓயாத நிலையில், அந்நாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய கொலம்பஸின் சிலையை போராட்டக்காரர்கள் தரையில் சாய்த்து உடைத்தனர்.
காவல் துறை அலுவலர்களால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கோரி, பால்டிமோர் நகரில் நடந்த போராட்டத்தின் போது, அங்கு 30 ஆண்டு காலமாக இருந்த கொலம்பஸின் சிலையை கயிறால் இழுத்து கீழே சாய்த்த போராட்டக்காரர்கள், அதன் உடைந்த பாகங்களை படாப்ஸ்கோ (Patapsco) ஆற்றில் வீசியெறிந்தனர்.
கொலம்பஸின் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த ஸ்பானிய மன்னர்களின் படையெடுப்பால் ஏராளமான பூர்வக்குடி அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, போராட்டக்காரர்கள் கொலம்பஸின் சிலையை உடைத்தது குறிப்பிடத்தக்கது.